எனக்கு அரசியல்னா பயங்கர அலர்ஜி. எனக்கு நல்லா விவரம் தெரிஞ்சதிலிருந்து நிறைய பாத்துட்டன். ஆனா ஒரே குழப்பமா இருக்கு.! எங்க வீட்டையும் அரசியல் விட்டுவைக்கல.
அரசியல்னா எனக்கு இதுவரைக்கும் தெரிஞ்சதெல்லாம் திமுக மற்றும் அதிமுக தான். ஒருத்தர் தாத்தா, இன்னொருத்தவங்க பாட்டி(அம்மானு சொல்றாங்க.!!).எனக்கு ஓட்டுரிமை வந்ததும் ரெண்டு பேர்ல நல்லவங்க யாருன்னு பாத்து தான் ஓட்டு போடுவேன்னு எல்லார் போலையும் சொல்லிட்டு இருந்தேன். சரி இப்ப யார் நல்லவங்கனு தேடி பாத்தா கையில ஒரு ஆளு கூட சிக்கமாட்டேங்குறாங்க. எல்லாருமே கெட்டவங்களா இருக்காங்க.
எங்க வீட்ல அம்மா அதிமுக கட்சி, அப்பா திமுக கட்சி. அதிமுக ஆட்சிக்கு வந்தா அராஜகம் அடங்கும்னு அம்மா சொல்வாங்க ஆனா நம்ம சுதந்திரமும் அடங்கிடும்னும் அப்பா சொல்வாங்க. இலவசம் கொடுத்து திமுக மக்கள கெடுக்குறாங்கன்னு அம்மா சொல்வாங்க, அதுகூட அதிமுக செய்யறதில்லனு அப்பா சொல்வாங்க. இப்படி எங்க வீட்டிலே எனக்கு பயங்கர குழப்பம். இந்த நிலைமையில என்னுடைய விருப்பமான 'அவரை' எங்க வீட்டுக்கு ஒரு முறை அழைத்து சென்றிருந்தேன்.
வீட்டுக்கு வந்தவர் என் அம்மா அப்பாவிடம் அமர்ந்து அரசியல் பேச தொடங்கிட்டார். அம்மா அதிமுக, அப்பா திமுக இவரு தாந்திடுகிடுத்தோம்னு யார் யாருக்கு சப்போர்ட் செஞ்சாலும் அதுல குத்தம் இதுல குத்தம்னு சொல்லுவாரு. ஒரே இம்சைங்க.!!
இருந்தாலும் எனக்கு எந்தமாதிரி குழப்பமிருந்தாலும் அரசியல் பதிவுகளை படித்தாவது இம்முறை ஓட்டை நிர்ணயிக்கலாம்னு பாத்தா இங்கேயும் எல்லாரும் எல்லாரையும் திட்டிகிட்டே இருந்தாங்க. அட இப்ப நான் என்ன தான் பண்றதுன்னு என்னவர்க்கு போன் செய்து அவர் யாருக்கு ஓட்டு போடுவார் என கேட்டேன். அவர் சொன்னது 49o. அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என விளக்கி கேட்க மனுசன் படு ஜோரா உக்காந்து விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. போன் பேலன்ஸ் தீரபோற சமயத்துல ஒண்ணுமே புரியலனு சொல்ல 'அது ஒண்ணும் இல்ல லூசு.. யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லனு எழுதிகொடுப்பது..'னு சொன்னார். அதுக்கு ஏன் பா என் பேலன்ஸ்லாம் கரைச்ச.?
சரின்னு நான் இந்த முறை 49o தான் என முடிவெடுத்து இருந்தப்ப ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி அப்படிங்கறவங்க பதிவை படிச்சேன். அட அருமையான பதிவுங்க. முதல் முறையா ஓட்டு போட போறோமே யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லைனு எப்படி எழுதி கொடுப்பதுனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன். இப்போ அந்த குழப்பம் தீந்துடுச்சு.!! அட என் ஓட்டும் இனி சுயேட்சைக்கு தான்.. ஏனா நானும் மதுரை தானே.!!!!!


7 comments:
அம்மா அதிமுக, அப்பா திமுக இவரு தாந்திடுகிடுத்தோம்னு யார் யாருக்கு சப்போர்ட் செஞ்சாலும் அதுல குத்தம் இதுல குத்தம்னு சொல்லுவாரு. ஒரே இம்சைங்க.!!
அங்கயுமா.... ஹ ஹ?....
அட என் ஓட்டும் இனி சுயேட்சைக்கு தான்.. ஏனா நானும் மதுரை தானே.!!!!!
ஹோ நீங்களும் மதுரையா... நல்லாத்தான் இருக்கு... ஹி ஹி... யோசிச்சு, உங்களவர்ட்ட கேட்டு சட்டு புட்டுன்னு 13 th ஓட்டுப் போடுங்கோ..........ஓகே யா....
யாராவது நல்லவங்க இருந்தா பார்த்து யோசிச்சி ஒட்டு போடுங்க...
//இந்த முறை 49o தான் //
இத விட நா ஒரு புது ஐடியா சொல்லட்டா?
ஐய்யா,அம்மா ரெண்டு பொத்தானையும் சேத்து புடிச்சு குத்துங்க வெளங்கிரும்!!!
parattukal
http://blogintamil.blogspot.com/2011/04/wow-interesting-posts.html
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..
Hi i am JBD From JBD
Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com
Post a Comment