Friday, April 8, 2011

கலைஞராவது ஜெயலலிதாவாவது-அட போங்கப்பா.!!

எனக்கு அரசியல்னா பயங்கர அலர்ஜி. எனக்கு நல்லா விவரம் தெரிஞ்சதிலிருந்து நிறைய பாத்துட்டன். ஆனா ஒரே குழப்பமா இருக்கு.! எங்க வீட்டையும் அரசியல் விட்டுவைக்கல.


அரசியல்னா எனக்கு இதுவரைக்கும் தெரிஞ்சதெல்லாம் திமுக மற்றும் அதிமுக தான். ஒருத்தர் தாத்தா, இன்னொருத்தவங்க பாட்டி(அம்மானு சொல்றாங்க.!!).எனக்கு ஓட்டுரிமை வந்ததும் ரெண்டு பேர்ல நல்லவங்க யாருன்னு பாத்து தான் ஓட்டு போடுவேன்னு எல்லார் போலையும் சொல்லிட்டு இருந்தேன். சரி இப்ப யார் நல்லவங்கனு தேடி பாத்தா கையில ஒரு ஆளு கூட சிக்கமாட்டேங்குறாங்க. எல்லாருமே கெட்டவங்களா இருக்காங்க.

எங்க வீட்ல அம்மா அதிமுக கட்சி, அப்பா திமுக கட்சி. அதிமுக ஆட்சிக்கு வந்தா அராஜகம் அடங்கும்னு அம்மா சொல்வாங்க ஆனா நம்ம சுதந்திரமும் அடங்கிடும்னும் அப்பா சொல்வாங்க. இலவசம் கொடுத்து திமுக மக்கள கெடுக்குறாங்கன்னு அம்மா சொல்வாங்க, அதுகூட அதிமுக செய்யறதில்லனு அப்பா சொல்வாங்க. இப்படி எங்க வீட்டிலே எனக்கு பயங்கர குழப்பம். இந்த நிலைமையில என்னுடைய விருப்பமான 'அவரை' எங்க வீட்டுக்கு ஒரு முறை அழைத்து சென்றிருந்தேன்.

வீட்டுக்கு வந்தவர் என் அம்மா அப்பாவிடம் அமர்ந்து அரசியல் பேச தொடங்கிட்டார். அம்மா அதிமுக, அப்பா திமுக இவரு தாந்திடுகிடுத்தோம்னு யார் யாருக்கு சப்போர்ட் செஞ்சாலும் அதுல குத்தம் இதுல குத்தம்னு சொல்லுவாரு. ஒரே இம்சைங்க.!!


இருந்தாலும் எனக்கு எந்தமாதிரி குழப்பமிருந்தாலும் அரசியல் பதிவுகளை படித்தாவது இம்முறை ஓட்டை நிர்ணயிக்கலாம்னு பாத்தா இங்கேயும் எல்லாரும் எல்லாரையும் திட்டிகிட்டே இருந்தாங்க. அட இப்ப நான் என்ன தான் பண்றதுன்னு என்னவர்க்கு போன் செய்து அவர் யாருக்கு ஓட்டு போடுவார் என கேட்டேன். அவர் சொன்னது 49o. அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என விளக்கி கேட்க மனுசன் படு ஜோரா உக்காந்து விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. போன் பேலன்ஸ் தீரபோற சமயத்துல ஒண்ணுமே புரியலனு சொல்ல 'அது ஒண்ணும் இல்ல லூசு.. யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லனு எழுதிகொடுப்பது..'னு சொன்னார். அதுக்கு ஏன் பா என் பேலன்ஸ்லாம் கரைச்ச.?

சரின்னு நான் இந்த முறை 49o தான் என முடிவெடுத்து இருந்தப்ப ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி அப்படிங்கறவங்க பதிவை படிச்சேன். அட அருமையான பதிவுங்க. முதல் முறையா ஓட்டு போட போறோமே யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லைனு எப்படி எழுதி கொடுப்பதுனு வருத்தப்பட்டுட்டு இருந்தேன். இப்போ அந்த குழப்பம் தீந்துடுச்சு.!! அட என் ஓட்டும் இனி சுயேட்சைக்கு தான்.. ஏனா நானும் மதுரை தானே.!!!!!

Monday, April 4, 2011

என்னை பெருமைபடுத்திய சாரு நிவேதிதா!

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் சாரு. அவரை பற்றி சில தரமற்ற விமர்சனங்கள் எழுந்தாலும் எனக்கு அவரை பிடிக்கும் என்பது மாறிடாது.  சமீபத்தில் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லியிருந்தேன் அல்லவா அதை தமது வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார் சாரு. இதுவே என்னை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.


அதை தொடர்ந்து அவர்
//தீபிகா என்ற பெயரில் யாரோ ஒரு மீசைதான் எழுதுகிறது என்று நினைக்கிறேன்.  ஏனென்றால் எழுத்தில் கொஞ்சம் ‘தில்’ தெரிகிறது.//

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எழுதுவதை மிகவும் தைரியமான ஒரு எழுத்தாளர், என்னை தைரியமானவள் என சொல்லியிருக்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் சொல்லும் அந்த 'தில்'-ஐ எனக்கு கொடுத்த என்னவருக்கும், என் வீட்டாருக்கும் நன்றி சொல்லிகிறேன்.

//பொதுவாக ப்ளாக் எழுதும் பெண்கள் இவ்வளவு ‘தில்’லாக எழுதுவதில்லையே? //

நான் தில்லாக  எழுதினாலும் எனது புகைப்படத்தை இதுவரை வெளியிடாததன் காரணமும் அதுதான். எல்லாவற்றிற்க்கும் ஒரு அடித்தளம் வேண்டுமே. அதுதான் இது.


//அதோடு அந்தப் புகைப்படம்?  சும்மா உடான்ஸ்தானே தீபிகா?  உண்மையாலுமே அது நீங்களா?  //


இவர் இங்கே குறிப்பிட்டுள்ள புகைப்படம் எனது ப்ரொபைலில் உள்ள ட்விட்டர் புகைப்படம். எல்லாம் அறிந்த சாருவுக்கு இது தெரியலையே. அந்த படம் 'கோத்த பங்காரு லோகம்' என்னும் படத்தில் நடித்த 'ஸ்வேதா பாசு ப்ரசாத்'தின் புகைப்படம். பிடித்திருந்தது அதனால் வைத்தேன். ஏற்கனவே இணையத்தில் என் புகைப்படத்தை விட்டு பட்ட பாடு போதும். என்னுடைய நெருக்கமானவர்களுக்கு தெரியும் நான் எப்படி இருப்பேன் என.!!


இதற்கு பிறகு சாரு,


//இருந்தாலும் தீபிகா, நீங்கள் ராஜீவ் நாத்தைத் தொடர்பு கொள்ளலாம்.  புதுமுகம் வேண்டும் என்கிறார்.  நீங்கள் நடிக்கத் தொடங்கினால் பெயரையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.  ஆனால் உங்கள் ‘அவர்’ பர்மிஷன் கொடுப்பாரா?//


ஹி ஹி.. அவர் கொடுப்பாரா இல்லையானு இதுல பின்னூட்டம் போடும்போது தெரியும். அவரு கொடுத்தாலும் நான் நடிக்கிற மாதிரி இல்ல. ஏனா என் முகம் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு வொர்த் இல்ல.


இருந்தாலும் என்னையும் மதிச்சு நடிக்க உங்களை கூப்பிட வைத்த சுவாதாவுக்கு(என் ப்ரோபைல் படம்..) என் நன்றிகள்.


இந்த சமயத்தில் எனது பதிவுகள் அனைத்தையும் படித்து சில திருத்தங்களையும் மேற்கொண்டு எவ்வாறு எழுதினால் சீக்கிரம் பிரபலமாகலாம் என்றெல்லாம் எனக்கு கற்பித்த அவருக்கு எனது பூரண நன்றிகள். ஆனாலும் அவரே இன்னும் பேமஸ் ஆகலயே!! ஐ ஐ..


Friday, April 1, 2011

உலக கோப்பை நமக்கே.!


கிரிக்கெட் உலக்கோப்பை இந்தியாவோட ஒரு திருவிழானா அதுல இந்தியா vs பாக்., ஒரு 'கெடா' வெட்டு மாதிரி(அத தான் தடை பண்ணிட்டாங்களே.!கெடா வெட்டை). இத்தன நாளா இந்த திருவிழால 'கெடா'வா இருந்தது நம்ம பங்காளியா இருந்திருந்தாலும் இந்த முறை யார் வேணா ஆகலாம்னு நிலைமைல தான் இருந்தது.! மீ்ண்டும நம்ம பங்காளியே வான்டடா போய் தலைய ஆட்டிட்டான்..!!



அதுவும் இந்த முறை இது செமி பைனலில். அரையிறுதியில் வென்று இலங்கையை எதிர்க்கப்போவது யார்.? ஹி ஹி.. இந்தியா தான்.


இந்த எதிராளி அப்படிங்கிறவன் பிஸினஸ்ல வரலாம், ஆபிஸ்ல வரலாம், ஸ்கூல்ல வரலாம் இப்படி எங்கிருந்து வேணா வரலாம். ஆனா இவனுங்க எல்லாம் அப்பப்ப வந்து அப்படியே அப்பீட் ஆயிடுவானுங்க. இன்னொரு எதிராளி ரகம் இருக்கானுங்க. சொந்தகாரப்பயலுக.!! நம்ம ப்ளஸ், மைனஸ் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு தூரத்துல பறக்குது காக்கானு சொன்னாக்கூட அவனய தான் சொன்னோம்னு சொல்லிபுட்டு வஞ்சகம் வச்சிடுவாங்க. எவன்கிட்ட இருந்துவேணா தப்பிக்கலாம் ஆனா சொந்தகாரனுங்க கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. அந்த மாதிரி ஒரு சொந்தகாரன் தான் நம்ம பாகிஸ்தான். அட நம்ம பங்காளிங்க.!!


அட நம்ம எவ்வளவு பெரிய ஆளுக.! போன உலககோப்பையில இந்தியா முத ரவுண்டே வெளிய வந்தப்ப பாகிஸ்தானும் வெளிய வந்திடனும்னு வேண்டின பரந்த மனசு காரங்க தானே நாம.! உலககோப்பை செயிக்காட்டி கூட கோபபடமாட்டாங்க.. ஆனா பாகிஸ்தான்ட்ட தோத்துபுட்டா.. ஊஊஊஊஊ... வீடு உடையும். உருவபொம்மை எரிப்பு. இதுக்கு பயந்தே நம்ம தலைவர் சச்சின் கேப்டன் பதவியே வேணாம்னுட்டாரு(அட உண்மையா கவனம் இல்லாம போயிடும்னு தான் வேணாம்னு சொன்னது.!) 

எப்படியோ பாகிஸ்தான ஜெயிச்சு பைனலுக்கு முன்னேறிடுச்சு நம்ம இந்தியா. சச்சின் சதத்தை தவறவிட்டது மகிழ்ச்சி தருது. லூசுன்னு நினச்சிடாதீங்க. சச்சின் சதம் அடிச்சியிருந்தா நாட்கள் பிறகு நான் 100ல 100 போட்டது நாலு அஞ்சு தடவ கேட்ச்ச உட்டதால தான்னு சொன்னா கேவலமா இருக்காது.? சச்சின் சதம் போடாததே சந்தோசம் தான்.

அடுத்து மும்பையில பைனல் மேட்ச். அவுங்க டீம்ல மேத்யூஸ் அடிபட்டிருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என்னா பொண்ணுடா இவன்னு நீங்க நினைக்கலாம். அதுமட்டுமில்லாம ராஜபக்க்ஷே வேற மேட்ச் பாக்க வர்றாராமே. இதுல அவுங்க ஜெயிக்கிறதுக்கு தோத்துட்டே போயிடலாம். முரளிக்கு அடி, மெண்ட்ஸ்க்கு அடின்னு காதுல இனிய வார்த்தைகளா வந்து விழுது.



மும்பை-சச்சின் சொந்த ஊர். இது போதாதா.? மாற்றான் வீட்டு தோட்டத்திலே பெருத்த லாபம் பெறும் சச்சின் சொந்த தோட்டத்துல அள்ளிடமாட்டாரா லாபத்த.? சச்சின் நாளைக்கும் சென்ச்சுரி போட கூடாதுன்னு வேண்டிக்கலாம். ஏன்னா, அவரு சென்சுரி போட்டா நினச்சத முடிச்சாச்சுன்னு சர்வதேச மேட்ச்சுகளில் இருந்து விலகினாலும் விலகிடுவார்.ஏன்னா நாம தான் நாளைக்கு ஜெயிக்க போறோமாச்சே.! அதனால நாளைக்கு சச்சின் 99ல அவுட் ஆயிடட்டும்.

ஜெயவர்தனே வேற சவாலுக்கு தயார் அப்படி இப்படி பேசுறாரு. பாப்போம்.. கசாப்பு கடையிலயே வந்து ஒரு ஆடு கதகளி ஆடுது.. உப்பு கரணம் போடாம இருந்தா சரி.. அப்பரம், இந்தியாவில் இருக்கும் கோடிகணக்கான கிரிக்கெட் பைத்தியங்களில் நானும் ஒருத்தி. பைத்தியத்துக்கு ஒரு வைத்தியமா இந்தியா ஜெயிச்சிடும் நாளைக்கு.!! நம்புவோம்.! வெல்லுவோம்.!


கோப்பை இந்தியாவுக்கே.! கமான் இந்தியா.! சச்சின் கையில உலககோப்பை பாக்க ஆவல்.. முரளியையும் ரொம்ப பிடிக்கும். ஆனா அவர்தான் ஏற்கனவே கப் வாங்கிட்டாரே.! சோ.! இந்தியாவுக்கு தான் முதலிடம்.. 

அதுமட்டுமில்லாம 1983 காலண்டரும் 2011 காலண்டரும் ஒரே மாதிரி இருக்கு பாருங்க.. ஸோ ஹிஸ்டரி ரிட்டன்ஸ்.. இந்தியா கலக்குங்க.!!

Friday, March 25, 2011

ஓர் அவசர உதவி.!!!

ரொம்ப நாளாவே எங்க சொந்த ஊருக்கு போகணும், அங்க நான் ஓடி விளையாடிய தெரு, ஆறு, கோவில்னு எல்லாத்தையும் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.



நான் ஒண்ணாவது படிக்கும்போது அங்கிட்டு இருந்து சென்னைக்கு ஓடினோம். எங்க அப்பா, அம்மா ஏன் என் தம்பி உருப்புடாதவன் கூட எங்க ஊருக்கு போயிட்டு வந்துட்டான் ஆனா என்னால போக முடியல. அதுக்கெல்லாம் காரணம் இந்த காலேஜ், ஸ்கூலுக தான்.

இல்ல நான் எல்லா வாத்தியாரையும் பாத்து கேக்குறன் நீங்களும் ஒருகாலத்துல ஸ்டூடண்ட்டா இருந்து தானே டீச்சரா ஆயிருப்பீங்க. எங்க வருத்தம் உங்களுக்கு புரியலையா இல்ல பழிவாங்குரீங்களா?

என்னைய லீவே எடுக்ககூடாதுன்னு சொல்லி சொல்லி என்ன எங்க ஊருக்கு போகவிடாமலே பண்ணின உங்களுக்கு சல்யூட்.. இந்த முறை எப்படியாவது எங்க  ஊருக்கு போயிடுறதுன்னு போன் பண்ணி சென்னையில இருக்குற 'அவர' வர சொல்லி எங்க அப்பா சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கிறதா பொய் சொல்லி ஒரு லெட்டர் தர சொன்னேன். நம்ப ஆளு தான் கில்லாடியாச்சே சொன்ன மாதிரியே லெட்டரோட வந்து வருத்தமா 'ஆக்ட்' பண்ணி என்ன வெளிய கூப்டுட்டு வந்துட்டார். அவரு யாருன்னு கேட்டப்ப என் 'தாய் மாமன்'னு சொல்லியிருக்கார். (தாய் மாமாவா.???)



சரின்னு அப்பாவுக்கு போன் பண்ணி ஊருக்கு போறதா சொல்லிட்டு அப்படியே என்னுடைய 'அவர்' கூடவே எங்க ஊருக்கு கிளம்பினோம். அடுத்த 8வது மணிநேரம் எங்க ஊர்ல ஆஜர்.

எங்க ஊர் முழுசாவே மாறியிருந்தது. ஒட்டியிருந்த கொஞ்ச கொஞ்ச நினைவுகள அவருக்கு விளக்கிகொண்டே நடந்தேன். கோயில்,எங்க  தெரு மனுசங்கே எல்லாரையும் பாத்தோம்.

எல்லாரும் என்ன பாத்ததும் முதல்ல தெரியாம விழிச்சாங்க. அப்பரம் என்ன நானே அறிமுகம் பண்ணின பிறகு அப்படியே, ''அடியே தங்கம்.. வாடி.. இம்புட்டு நாள் ஆச்சான்னு'' அப்படி இப்படி பாச மழைய பொழிஞ்சாங்க. அட கிராமம் கிராமம் தான்யா.


அங்க நான் போனதுக்கு முக்கிய காரணம் எங்க தெருவோர பாட்டிய பாக்கணும்னு. அவுங்க சமைக்கிற சாப்பாடு அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். அவுங்க கிட்ட எப்படியாவது ஒரு முறையாவது வாங்கி சாப்பிடணும்னு போய் அவ்ங்கள பாத்தா அவுங்க அழுதுட்டு இருந்தாங்க.

மனசு கேக்கல.. உள்ளே புகுந்தேன்.. என்னை பாத்ததும் விழிபிதுங்கி பாக்க என்னை அறிமுகம் செஞ்சேன்.  கண்ணுல இருந்து ததும்புன கண்ணீர துடச்சிட்டு எழுந்து வந்து கொஞ்சினாங்க. ஆனா அவுங்க அழுதது என் மனசு கேக்கல. அதுவரைக்கும் என்னுடைய 'அவர்' என்ன பண்ணினாருன்னு கேக்குறீங்களா? அந்த பாட்டி வீட்டுக்கு புதுசேன்னு ஒரு கூச்சமும் இல்லாம நேரா அடுப்படிக்கு போயி பிரிச்சு மேய ஆரம்பிச்சுட்டாரு நம்ம ஆளு. கேட்டா ரிப்போர்ட்டராம்.. அடுப்படியில என்னங்க ரிப்போர்ட்..

கொஞ்ச கொஞ்சமா பாட்டிகிட்ட அவுங்க அழுத காரணத்த கேட்டேன்.. வழக்கமான அந்த புலம்பல்களுடன், ''என்னாத்த சொல்லுவேன்.. எங்க போய்யி சொல்லுவேன்..'' அந்த மாதிரி புலம்பல்கள்லாம் ஓடுச்சு. அப்போ அடுப்படியில இருந்து வாயில வடைய கடிச்சுகிட்டே வெளிய வந்தார் என் 'அவர்'.  அவரை நோக்கிய பாட்டி ''இதுதான் எல்லாத்துக்கும் காரணம்'' என்றார்.

அதை கேட்ட அவர் வாயில் வைத்த வடை உள்ளே போகாமல், கண் பிதுங்கி திரு திருவென முழித்தார். நம்ம ஆளு நமக்கு தெரியாம என்ன பண்ணியிருப்பார்னு யோசிச்சுகிட்டே,

''என்ன பாட்டி.. அவுரு என்ன பண்ணினார்''

''அவன யாருடி சொன்னது.. அவன் வாயில வச்சிருக்கிற வடைய பத்தி சொன்னேன்''

ஒருவேளை அவர் வடையை எடுத்தது அவருக்கு பிடிக்கவில்லையோ.!! இல்லையே நாங்கள் வரும் முன்பே அவர் அழுதுகொண்டுதான் இருந்தாரே.!!


''என்னதான் ஆச்சு பாட்டி?''

''காலையில ஏச்சதும் வட சாப்டா நல்லாயிருக்கும்னு தோணுச்சு.. சரின்னு வடைய தட்டி போட்டா.. அதுல ஒரு வடையை ஒரு காக்கா தூக்கிட்டு போயிடுச்சு''என்று சொல்லி மீண்டும் அழுதார்.

ஒரு வடையை காக்கா தூக்கிட்டுபோனதுக்கே இப்படி புலம்புறாரே நம்ம ஆளு 10வடையை முழுங்கிட்டு உக்காந்திருக்காரே என்ன ஆகும்னு யோசிச்சுகிட்டே அவர பாத்தா அவரு கண்ணுல கலவரம். உடனே அந்த பாட்டி ''நீ திண்ணு தம்பி''னு சொல்ல கொஞ்சம் கூட கவலையில்லாம அதை எடுத்து திண்ண ஆரம்பிச்சிட்டார். என்னுடைய அவர்-ரொம்ப மோசம்.

இப்ப என்ன ப்ராப்ளம்னா எங்க பாட்டி அழுகுறது எனக்கு பிடிக்கல.. இம படிக்கிற யாராவது அந்த வடைய தூக்குன காக்கா(உண்மையான காக்கா தாங்க என்னுடைய அவர பத்தி சொல்லல) எங்கனு கண்டுபிடிச்சு சொல்றீங்களா.? ப்ளீஸ்.. இது தான் நான் கேட்ட அவசர உதவி..

டிஸ்கி:கடைசி பத்தியில் சில நகைச்சுவை விசயம் தவிர அனைத்தும் நடந்த உண்மை. அருமையான அனுபவம். உண்மையான படங்களையோ, இடத்தின் பெயரையோ சொல்ல எனக்கு அனுமதி இல்லை. அதனால் இங்கு போடவில்லை.

Friday, March 18, 2011

பதிவர்களின் கவனத்திற்கு.!!

அகில உலக தமிழ் பதிவர்களுக்கு எனது மனமார்ந்த கண்டனங்கள். என்னடா இவ இப்படி சொல்றாளே இது ஒரு காமெடி பதிவுன்னு மட்டும் நினைக்காதீங்க. நான் ரொம்ப சீரியஸா பேசுறன்(ஏன் ஆஸ்பத்திரில முடியாம கிடக்கியா?)



இந்த போக உட்டு மண்டையில அடிக்கிறது, உக்காந்திருக்கும்போது காதில விழாதமாதிரி நக்கல் உடுறது இந்த மாதிரி விசயமெல்லாம் எங்களுக்கு தெரியாது. தெரிஞ்சிக்கவும் விரும்பல. அராஜக பதிவு எங்களுக்கும் எழுத தெரியும் ஆனா போட மாட்டோம் போட தெரியாது எங்களுக்கு.(ஏன் யா நான் சரியா பேசுறேனா?)

(இப்ப எதுக்காக இதெல்லாம் பேசுறன்?) அய்யய்யோ இப்ப எதுக்கு வந்தன்னு மறந்துட்டனே.. பிரபல அடுக்கு மொழியின் தலைவர் டி.ஆர்., அவர்களின் தீவிர ரசிகை நான்னு சொல்லிக்கொள்ள பெருமை படுகிறேன்(தூக்குல தொங்கலாம்).


எனக்கு என் பதிவுலக உறவினர் ஒருவர்(.!?) காதலை பற்றி எழுதுவதை நிறுத்து, அதிகமாக பிறர் வலைப்பூவிற்கு சென்று படி, கருத்து தெரிவித்து வா, திரட்டிகளில் அதிகமாக இணை போன்ற அறிவுரைகளை வழங்கினார்.(என்ன ஒரு புத்திசாலித்தனம்.!!)


சரி சொல்லிட்டாரேன்னு அதிகமா மத்தவங்க வலைப்பூவிற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். ஆனா எனக்கு டெம்ப்ளேட் கமண்ட் போடுவதை தவிர அங்கு என்ன கமண்ட் போடுறதுன்னு தெரியல. ஆனா டெம்ப்ளேட் கமண்ட் போடுறதுல எனக்கு விருப்பம் இல்ல.(சொல்லிட்டாங்கயா.!!)


ஒருத்தவங்க கவிதையா எழுதுவாங்க.. அங்க போய் அவங்க முதல் கவிதைய படிச்சிட்டு அருமைன்னு சொல்றன்.. அவுங்க அடுத்த கவிதையும் அருமையா இருக்கும்போது வாய மூடிகிட்டு வந்திடுறன்.. ஆனா மக்கள் நான் கமண்ட் போடுறதில்லனு சொல்றாங்க.. இன்னும் சிலர் பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கவர்ச்சி படங்களை போட்டு அவிங்க வலைப்பூ சுவையையே படிக்கவிடாம பண்ணிடறாங்க.(சிபி சார் நான் உங்கள சொல்லல;))))) நான் பெண்ணாக இருப்பதால் எனக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருக்கலாம் என இருந்தேன். ஆனால் ஒரு ஆண்பதிவரும் இதே கருத்தை சொன்னார்(இவரு அவரில்லைங்க.!!)


மேலே சொன்னவரின் அறிவுரைகளை அப்படி இப்படினு பின்பற்றினாலும் பதிவு ஒண்ணுகூட பேமஸ் ஆகல(ஊருக்கு வரும்போது உங்கள பாத்துகிறன்). கமண்ட் போடுற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஓட்டுனு போட்டிருந்தாலும் என் பதிவு பேமஸ் ஆகியிருக்குமே!! அப்படினா என்னோட கருத்துபெட்டிகுள்ளயே பல கருப்பு ஆடுகள் இருக்கு..(ம்ம்ம்மே ப்ளாக் ஷீப்..)

இப்ப கேக்குறன் இப்போது பிரபல பதிவராக இருப்பவர்களிடம்.. நீங்கயெல்லாம் ஒரு காலத்துல புதிய பதிவராக தானே இருந்தீங்க புதிய பதிவரின் வலி வருத்தம் உங்களுக்கு தெரியாதா? எப்படி தான் நான் எழுதவேண்டும்.? நீங்கயெல்லாம் வேலை பாக்குறீங்க நான் படிக்கிறேன். இன்ஜினியரிங் படிக்கிற ஒரு பொண்ணு, அதுவும் ஹாஸ்டலில் தங்கியிருக்க நான் எப்படி இணையத்துல அதிக நேரம் செலவிட முடியும்.? (உனக்கு தான் அவர் கூட பேசவே நேரம் சரியா இருக்கே.!!) நான் ஃபாலோ பண்றனோ இல்லையோ நான் நிறைய பதிவர்களின் பதிவை படித்து வருகிறேன். ஆனால் கருத்து தெரிவிப்பதில்லை.. அதற்கு என் நேரமின்மை தான் காரணம்.(ஓ.. அப்படியா.!!!)

என்னடா நமக்கு ஓட்டும் விழல, ஃபாலோவர்ஸ்ம் இல்லையே அப்படினு கவலைபடமாட்டேன்.(ஹே ஹே!!!!!!) ஏன் என்றால்.. தம்பி கூர்மதியன் வலைப்பூ ஆரம்பிச்சு பல மாதங்கள் ஆச்சு(வேஸ்ட்!!!!). தொடர்ந்து பதிவு, கருத்து அப்படி இப்படினு ஏதேதோ பண்ணினாலும் அவருக்கு இப்ப தான் 35ஃபாலோவர்ஸ் வந்திருக்காங்க(ஏதாச்சும் உருப்புடியா எழுதியிருந்தா ஒருவேளை நல்ல பேமஸ் ஆகியிருப்பாரோ.!!). ஆனா நான் ஆரம்பிச்சு மூணு மாசம் தான் ஆகுது. முதல்ல காதல காதல்னு எழுதினன் அப்பரம் பதிவுகள அப்பப்ப வந்து போட்டன், ஒரு தொடர் பதிவர் போலவே இல்ல(படிப்பு பெரிய இடஞ்சலா இருக்குங்க..) இப்படி இருக்க எனக்கு 39ஃபாலோவர்ஸ் இருக்காங்க. அவருக்கு கம்ப்பேர் பண்ணும்போது நாம எவ்வளவோ பரவாலன்னு மனச தேத்திகிறேன்..(நக்கலு!!!!!!!!)


சிலர் என்னை கேக்கலாம் ஏன் கூர்மதியன நக்கல் பண்றீங்கனு. சும்மா நான் மட்டும் இணையத்துக்கு வந்தா முகநூல்ல(பேஸ்புக்க இப்படிதான் சொல்லணுமாம்..) கொஞ்சம் உக்காந்திட்டு போவன். என்ன புடிச்சிகிட்டு ப்ளாக்குக்கு வா, டிவிட்டருக்கு வான்னு சொன்னது அவர் தான். பின்ன அவர நக்கல் பண்ணாம வேற யார பண்றது.(நீதானய்யா அது??? இரு இரு உன்ன போட்டு தள்றன்..)

சரி சரி.. எதுக்கு இந்த கதையெல்லாம்னு யோசிக்கிறீங்களா?????? நான் தான் டி.ஆர்., ரசிகையாச்சே கேக்கவந்த மேட்டருக்கு பத்துபக்கம் வேற விசயத்த பேசிட்டு தான் மேட்டருக்கு வரணுமாம்.. அதான் டி.ஆர்., ஸ்டைல்..(ஏன் யா நான் சரியா பேசுறேனா????????)

இப்ப நான் என்ன கேக்குறேனா என்னால் அதிக நேரம் இணையத்தில் செலவிடமுடியாது. இருக்கும் கொஞ்ச நேரத்தில் அவ்வபோது இப்படி பதிவு போடுறன், அதிகமா படிக்க ஆசைபட்டு எல்லாருதையும் படிக்கிறேன்.. எல்லாருடையதையும் படிக்கும்போது கருத்துகள் தெரிவிக்க நேரமில்லாமல் போகுது.. இப்ப நான் பிரபல பதிவராவது எப்படி.??? (நீ அதுக்கு சரிபட மாட்ட..)

யாராச்சும் சொல்லுங்களேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிலர் மொக்கை பதிவுகள எழுத சொல்றாங்க.. ஆனா எனக்கு அதெல்லாம் எழுத தெரியாதுங்க(ஐ ஆம் பாவம்!!!!!!!!!) எனக்கு தெளிவான அறிவுரை வழங்காதவர்களுக்கு எங்கள் தலைவர் படம் மூன்று ஒரே நாளில் போடப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.(ஹி ஹி) சாம்பிளுக்கு கீழே பாருங்க..


Wednesday, March 9, 2011

அவர்கள் செய்தது தவறா???????

என்னடா இவ அப்பப்ப வர்றா போறான்னு நினைக்ககூடாது.. எக்ஸாம் பேப்பர் கொடுத்து டிசப்பாயின்ட் பண்ணிட்டாங்க எங்க டீச்சர்ஸ்(என் காலேஜ் டீச்சர் யாரும் இல்லையே.!!!)


இந்த பதிவுலகம் நுழஞ்சதுக்கு முக்கிய காரணம் என் காதல பத்தி எழுதணும்னு தான்.. ஆனா ரெண்டு வாரம் முன்னாடி அவருகிட்ட போன் பேசினபோது அவர் சொன்னது என்னவென்றால்,

''&$*&(*(*%&$%#&&$&$...(பர்சனல்.!!) உன்ன எழுத சொன்னது நான்.. ஆனா இப்படி எழுதுன்னு சொல்ல எனக்கு உரிமையில்ல.. ஆனா என்ன பத்தி எழுதாதன்னு சொல்ல எனக்கு உரிமை உண்டு..  நான் எழுதுறதுல்ல பேமஸ் ஆவனா மாட்டேனான்னு தெரியல ஆனா நீ ஆகலாம்.. உனக்கு அந்த திறமை இருக்கு.. ஆனா அந்த திறமைய ஒண்ணுத்துக்கும் உதவாத என்னைபத்தி எழுதி வீண்டிக்கிற.. மத்தத பத்தி எழுது.. மத்தத மட்டும் எழுதுன்னு சொல்லல.. என்ன பத்தி எழுத உனக்கு முழு உரிமையுண்டு.. ஆனா அதோட அளவு உனக்கு தெரியும்.. #@$@#@!%#$!(பர்சனல்.!!)''

இததான் சொன்னாரு..

அடடா நாம எழுதுறது சரியில்லையோ.!! இனிமே காதல பத்தி குறச்சுட்டு பொதுவா கொஞ்சம் எழுத முடிவெடுத்துள்ளேன்(யாருப்பா அது கைய தட்டுறது.???)


போன முறை ஒரு தடவ சென்னை போயிருந்தபோது செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்துக்கு எலக்ட்ரிக் ட்ரெயின்ல நானும், அவரும் வந்துட்டிருந்தோம்.. ஜன்னல் ஓர சீட்டுனா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் முதல்ல அந்த இடத்த புடிச்சுக்க என் பக்கத்துல அவர் உட்காந்துகிட்டார்..

நேரம் போக போக ஒவ்வொரு ஸ்டேஷனா மாறி மாறி பொத்தேரின்னு ஒரு ஸ்டேஷன் வந்துச்சு.. மிரண்டுட்டன்.. எஸ்.ஆர்.எம்., காலேஜ் அங்க இருக்குறதால அங்க வர்ற வரைக்கும் 'ஈ'  ஓட்டிகிட்டிருந்த ட்ரெயின்ல நிக்க கூட இடமில்லைங்க..(கொடுமை கொடுமை)



மேல ஏறின பசங்க அப்படியே படியிலயே நின்னுகிட்டு தாளம் போட்டுகிட்டு இருந்தானுங்க.. நம்ப ஆளு தான் பெரிய ஞானியாச்சே(சும்மா உல்லல்ல).. அது புடிக்கலையாமா அவருக்கு.. மூஞ்ச இழுத்துவச்சுகிட்டு அவனுங்கள திட்டுகிட்டு இருந்தார்..

ஆனா எனக்கு செம ஹேப்பி.!! ஜாலியா பாத்துகிட்டிருந்தப்ப கீழ ஒரு நடுத்தர வயது, ஏழை நபர் ஒருத்தர் உக்காந்திருந்தார்.. அந்த பசங்க தாளம் போட்டுகிட்டு அந்த நபரையும் எழுந்து ஆட வச்சனர்.. அவரது அழுக்கான ஆடைகள் எதையும் கணக்குல எடுக்காம அவர புடுச்சு அவருகூட கைய கோத்து ஆடினத பாக்கும்போது தீண்டாமை, அசிங்கம் அப்படி இப்படிங்கறதெல்லாம் மக்கள் மனசிலிருந்து போயிடுச்சுன்னு சந்தோசப்பட்டன்..

அப்படியே பெருங்களத்தூர் வந்ததும் அந்த நபர் அவசர அவசரமா கீழ இறங்க.. கேட்டா அவரு வண்டலூர் போகணுமாம்.. அடபாவிகளா ஒருத்தர ஆடவச்சு ஸ்டேஷன மிஸ் பண்ண வச்சுட்டீங்களேன்னு நினச்சுகிட்டன்..

சானடோரியம் வந்ததும் இறங்கி நடக்க ஆரம்பிச்சோம்.. நடக்கும்போது அந்த தாளம் போட்டவங்கள பத்தி பேச ஆரம்பிச்சன்.. எனக்கு அதுல புடிச்சது என்னன்னா இந்த வயசுல தானே என்ஜாய் பண்ண முடியும்.. சோகமா உக்காந்திருந்த ஒருத்தரை எவ்வளவு மகிழ்ச்சியா ஆடவச்சாங்க.. சுத்தி இருந்த எல்லாரும் பாத்து எவ்வளவு சந்தோசமா இருந்தாங்க.. அப்படி இப்படினு எனக்கு புடிச்சது எல்லாத்தையும் சொன்னேன்..


ஆனா அவர் சொன்னது.. இதிலென்ன என்ஜாய்மண்ட் இருக்கு.??? உடம்புக்கு முடியாம எவ்வளவோ  பேர் வருவாங்க.. அவங்களுக்கு  இது இடஞ்சலா இருக்காதா.??? இவங்க பண்ணுன இம்சையில எங்க பக்கத்துல ஒருத்தர் பிஸ்னஸ் விசயமா போன் பேசிட்டு இருந்தார்.. ஆனா இவங்க பண்ணின இம்சையில போன்ல ஒழுங்க பேசமுடியாம அவர் கஷ்டபட்டார்.. ஒருத்தர் இறங்க வேண்டிய ஸ்டேஷன்லயிருந்து தாண்டி வந்து இறங்குறார்..  ட்ரெயின்ல போய்கிட்டே பக்கத்துல ரோட்ல போற பொண்ணுங்கள கிண்டல் பண்றது... இப்படிலாம் பண்றது ஒரு பொழப்பா.??? காலேஜ் படிக்கும்போது எவனுக்கும் இந்த தீண்டாமை இதெல்லாம் தெரியாது.. படிச்சு முடிச்சபிறகு தான் ஆரம்பிப்பாங்க.. இப்படிலாம் சொன்னார்..

எனக்கென்னமோ இவர் சொல்றதும் தப்பில்லனு தோணுது.!! இதுல அந்த பசங்க செஞ்சது தப்பா என்னான்னு தெரியல.. யாராச்சும் சொல்லுங்கப்பா..


Friday, February 25, 2011

என்னை பிடிக்கவில்லையா.?


கெஞ்ச தெரியா மனதிற்கு
கெஞ்சல் சொல்லிட்ட
உன் கொஞ்சிடும் வார்த்தைகள்
என்று என் காதில் ஒலிக்கும்.???

பேனா பிடித்த உன் கைகள்
தானாக கிறுக்கியது என் பெயரை
என்று காதலாகி நீ சொல்லப்போவது
எந்த நாளில் என சொல்வாயா.???

காதல் பிடிக்கவில்லையென
மணவாழ்க்கை பிடிக்கவில்லையென
சொல்லி திரிந்த உன்னை
என் காதலனா(.???)க்கி கொண்டேன்
என சொல்லும் உரிமை எனக்கு உண்டா.???

நான் எழுத துணிந்தது உன்னால்.!!
என் எழுத்துகளும் நீயாய்.!!
கவிகள், கதைகள் என அனைத்தும் நீயே
என் எழுத்துகளை திருடிகொண்டிருக்க
உன் எழுத்துகளின் ஓரமாய் கூட
என்னை சீண்டிடாத காரணம் ஏன்.???

உன் எழுத்துகள் எனை கொள்ளும் அளவிற்கு
உனக்கு  என்னை பிடிக்கவில்லையா.???
என்னை கவர்ந்ததும், பாதித்ததும், காதலித்ததும்
என் எழுத்தாக  உருப்பெரும் என அன்று சொன்னாயே.!
மூன்றில் ஒன்றாக்கூட நானில்லாமல் போனேனா.???

என்னை விடு..!!
பெண்ணை பற்றி, பெண் புகழை மெச்சும் நீ
இதுவரை பெண்ணை பற்றி கவிபடைத்ததுண்டா.???
காரணம் சொல்லமுடியுமா.???
கலங்கியிருக்கும் எனக்கு
உன் எழுத்தால் உயிர்கொடுப்பாயா.???
அந்நொடியை எதிர்பார்த்து
அன்போடு என்றும் உன் தியா.!!!



டிஸ்கி 1: ஸ்கூலே பரவாலங்க இந்த காலேஜ்களுக்கு டெஸ்ட் டெஸ்ட்னு உயிர வாங்குறானுங்க.. புரியலையா ஒருவாரம் டெஸ்ட் அதான் பதிவு போடல.. இப்ப தான் வந்துட்டோம்ல..

டிஸ்கி 2: காதல பத்தி கவிதை எழுதாதன்னு மத்தவங்ககிட்ட சொல்லும்போது நீயும் அப்படியே எழுதாதன்னு சொன்னார்.. அதான் இத்தன நாளா கவிதை போடல.. சரி வேற ஏதாச்சும் கவிதை போடலாம்னு பாத்தா ஒண்ணும் தோணல அதான் வந்த கோபத்துக்கு கேள்வியா கேட்டுட்டன்.. நான் கேட்டது சரிதானுங்கோ.??

டிஸ்கி 3: கடைசியில 'தியா'ன்னு போட்டதுக்கு காரணம் என்னை அவர் அப்படி தான் அழைப்பார்..